புதுக்குடியிருப்பு வடிகாலமைப்பு தொடர்பில் அதிகாரிகள் நேரில் சென்று ஆராய்வு

526 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியில் அண்மைய நாட்களில் வெள்ளம் கடைகள் வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு அழிவுகளை ஏற்ப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் (2 9 ) நடைபெற்றபோது கலந்துரையாடப்பட்டது இது தொடர்பில் உரிய வடிகால் அமைப்புக்கள் இல்லாமையினாலேயே இவ்வாறு நடைபெறுவதாகவும் எனவே இது தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டு முடிவு எடுப்பதாகவும் இதற்கென குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது

அதனடிப்படையில் பிரதேச செயலாளர் பிரதேச சபை செயலாளர் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி சி சிவமோகன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரி மற்றும் வர்த்தக சங்க செயலாளர் உள்ளிட்ட அணி நியமிக்கப்பட்டது.

இதனடிப்படையில் இந்த குளுவினர் புதுக்குடியிருப்பு நகர் பகுதியை பார்வையிட்டு அங்கு காணப்படும் குறைகளை நேரில் ஆராய்ந்ததோடு வடிகால்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்களை பார்வையிட்டு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியால் வரும் நீரை நேரடியாக கடைகளுக்குள் செல்வதை தடுக்கும் முகமாக வடிகால்களை அமைக்கவும் சுப்பிரமணியா வித்தியாசாலை அருகில் புதிதாக பாலம் ஒன்றை அமைத்து நீரை வெளியேற்றவும் இதுதொடர்பில் நிதியீட்டங்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடியதோடு நீர் வடிந்தோடும் கால்வாய்களை பிரதேச சபையை உடனடியாக துப்பரப்வு பனி ஒன்றை மேற்கொள்ளுமாறும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

Leave a comment