ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ வீரருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா – இபுல்கொட பகுதியில் வைத்து கடந்த 2009ம் ஆண்டு 9ம் மாதம் 23ம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
சந்தேகநபரை அண்மையில் அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்திய வேளை, உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவியும் அடையாளம் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி இன்று சந்தேகநபர் கம்பஹா பிரதம நீதவான் காவிந்தா நாணயக்கார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 9ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தன்று சந்தேகநபரால் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் குறித்தும் அறிக்கையை பெற்றுக் கொள்ள நீதிமன்றம், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதியளித்துள்ளது.