அமெரிக்காவில் இலங்கை தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்ட விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு. அன் நாட்டு ஊடகங்களில் இச்செய்தி முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது. கீதா என்று அழைக்கப்படும் 63 வயதுப் பெண் 15 தடவை கத்தியால் குத்தப்பட்டு கொலைசெய்ப்பட்ட விடையம் தொடர்பாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் இதில் நீங்கள் அறியாத விடையம் பல உள்ளது. அதிர்வின் வாசகர்களுக்காக இதோ இந்த புலனாய்வு தகவல்…
சம்பவ தினமன்று, கீதாவின் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக அவர் செல்ல தயாராக இருந்துள்ளார். அதுபோக அவர் வங்கிக்குச் சென்று பணம் எடுத்ததாக கூறப்படுகிறது. பணம் எடுக்க தான் சென்றாரா இல்லை, நகைகளை எடுக்க சென்றாரா என்பது இதுவரை தெளிவாகவில்லை. இன் நிலையில் அவர் வீட்டுக்கு வந்தவேளை அவரது ஹாலில் வைத்தே இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. டோன் டெல் மோர் என்னும் இந்த கறுப்பு இன இளைஞர், கீதாவை 15 தடவை கத்தியால் குத்தியுள்ளார். கூச்சல் சத்தம் காரணமாக அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் சொல்ல , விரைந்து வந்த பொலிசாரைக் கண்ட அவர் மேலும் பல தடவை கீதாவை கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றவேளை, சற்று தொலைவில் கைதாகியுள்ளார். இவரை சுமார் 34 தடவை முன்னர் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். அதுபோக சந்தேக நபர், தனக்கு கீதா யார் என்றே தெரியாது என்றும். அவரை தான் கொலை செய்யவில்லை என்றும் தெளிவாக கூறியுள்ளார். சம்பவம் நடந்த வேளை அவர் வீட்டுக்கு அருகாமையில், அவர் காணப்பட்டது ஒன்றே குற்றம் என்றும். தனக்கும் இதுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்கிறார் இன் நபர். இதனால் கீதாவின் வீட்டை சுற்றிவளைத்து தடயவியல் நிபுனர்கள் தேடி வருகிறார்கள். இக் கொலையை அவர் தான் புரிந்தார் என்பதற்கான ஆதாரங்களை பொலிசார் சரியாக கண்டுபிடிக்கவில்லை என்றால், பெரும் சிக்கல் உருவாகும்.