ஜனாதிபதி மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் செயற்படுத்தத் தவறியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி வழக்கறிஞர் ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் இது குறித்த அடிப்படை உரிமை மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை முன் அனுமதியின்றி பார்க்க முடிவும் என, ஜனாதிபதி மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை தான் சந்திக்க அனுமதி கோரி 30 நாட்களுக்கும் மேலாகின்றது எனவும், ஆனால் இதுவரை அனுமதி கிட்டவில்லை எனவும் மனுதாரர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.