கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய 21 வயதான இளைஞர் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர் ஏறாவூர் ஓடாவியார் வீதியில் வைத்து இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 5630 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விற்பனைக்காகவே குறித்த நபர் கஞ்சா வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது.இதன் அடிப்படையில் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். மேலும், இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.