ஒளியில் மிதந்தது தமிழீழக் கனவு!

641 0

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் இவ்வருட மாவீரர் நாள் (2017) என்றும் இல்லாதவாறு தாயகம் எங்கும் ஒளி தீபங்கள் வான் நோக்கி ஒளிர்ந்தன.

ஆக்கிரமிக்கப்பட்டு சிதைக்கபட்ட துயிலுமில்லங்கள், துயிலுமில்ல வாசல்கள் எங்கும் சிவப்பு ,மஞ்சள் தேசிய நிறங்களால் அலங்கரிக்கப்பட்டு,மாவீரர்களை வரவேற்க தயாரானது.

தாயகம் எங்கும் கார்திகை 27 ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு சுடர்கள் ஏற்றப்பட்டன. அந்த சுடர்களின் ஒளியில் மாவீரர்களின் முகங்கள் முகம் காட்டிச் சென்றன. சுடரின் ஒளிக் கீற்றுகள் தமீழீழக்கனவை கட்டியம் கூறிச் சென்றன.

உயிர்விடும் வேளையில் உத்தமர்களின் நாவுகள் உரைத்தது தமிழீழம் இந்த உயிர் மூச்சான தமிழீழம் ஒளிகளில் ஒளிர்ந்தது. இது சிங்கள தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் செய்தி ஒன்றை சொல்லி நின்றது.

“மகத்தான மனிதப் பிறவிகளின் நினைவாக நாம் ஏற்றும் தீபங்களில், அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில், எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக ஒளிவிட்டு எரிவதை நாம் எமது நெஞ்சில் நினைவு கொள்வோமாக.” என தமிழீழ தேசிய தலைவர் 2005 மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியது போலவே தேசமெங்கும் ஒளிர்ந்த தீபங்களில் தமிழீழக் கனவு ஒளிவிட்டது.

மாவீ ரர்களின் தியாகங்களை மனதில் கொண்டு சுடர் ஏற்றி அவர்களிற்கு வணக்கம் செலுத்திய மக்கள் அந்த வீரர்களின் கனவை நினைவாக்க உழைப்பார்கள். ஒளியில் மிதந்தது தமிழீழம் .

Leave a comment