நிட்டம்புவ-அத்தனகல்ல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளை குழு உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமராதுங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நிட்டப்புவ நகரத்தில் உள்ள மணிகூண்டு கோபுரத்திற்கு அருகில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக கட்டப்பட்டுள்ள அத்தனகல்ல பிரதே செயலாளர் காரியாலயத்தின் கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு சந்திரிக்கா வந்த போதே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, குறித்த கட்டிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.