ஹபரணையில் காரொன்றும் பஸ் வண்டியொன்றும் மோதியதில் இருவர் உயிரிழந்து 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து தம்புள்ளை சென்ற கார் ஒன்றும் கண்டியிலிருந்து திருகோணமலை சென்ற தனியார் பஸ் வண்டியொன்றுமே நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காரின் சாரதியும் மற்றுமொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.