ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்வதற்காக அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் அ.தி.மு.க.வின் வேட்பாளரை தேர்வு செய்வதில் அக்கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மூத்த தலைவர் மதுசூதனன், பாலகங்கா உள்பட 25 பேர் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
இந்நிலையில், வேட்பாளரை முடிவு செய்ய அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழு இன்று கூடியுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி, செல்லூர் ராஜூ, வேலுமணி மற்றும் மதுசூதனன் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வைத்தியலிங்கம் மற்றும் கே.பி முனுசாமி ஆகியோர் புதிதாக ஆட்சி மன்ற குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.