மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் மாகாண சபை தேர்தல்!

381 0

மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் மாகாண சபை தேர்தலுக்கான இட நிர்ணயம் தொடர்பான கருத்தறியும் அமர்வு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாகாண எல்லை நிர்ணய குழுவின் தவிசாளர் கே. தவலிங்கம் தலைமையிலான குழுவினர் மக்கள் கருத்தறியும் அமர்வினை நடத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தை 3 தொகுதிகளாக பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது இதற்கான மக்கள் கருத்தறியும் செயற்பாடு நேற்று (29)நடைபெற்றுள்ளது இதில் அரசியல் கட்சியினர் வடமாகாண சபை உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

Leave a comment