ஆவாவைச் சேர்ந்த மேலும் மேலும் மூவர் கைது!

293 0
ஆவாவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கைது பொலிஸார் தெரிவிப்பு
ஆவா குழுவுடன் இணைந்து வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் மறைந்திருந்த மூவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே நேற்றிரவு மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
கோண்டாவில், கொக்குவில் மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் 6 பேரும் விசாரணையில் உள்ளனர். அவர்களால் வழங்கப்பபடும் தகவலின் அடிப்படையில் ஆவா குழுவைச் சேர்ந்த முக்கியநபர்கள் கைது செய்யவேண்டியுள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment