ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடும் தமிழக போலீசார் தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள் என்று தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கூறி உள்ளார்.
தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு), சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் அவர்களுக்கு கீழ்வரும் அனைத்து அதிகாரிகள், காவலர் ஆகியோர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடுவார்கள்.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 27-ந் தேதியில் இருந்து, தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள் வரை இந்த அதிகாரிகள் உள்பட அனைவரும் இந்திய தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடு, கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைக்கு கொண்டுவரப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.