சீரற்ற காலநிலை காரணமாக அதிக பாதிப்பு!

287 0
கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தொட்டை ஆகிய மாவட்டங்கள் மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பல இடங்களில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும், வீதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதாகவும் தெரவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை வரையில் பல வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களும் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த நிலைமைகளை சீரமைப்பதற்கான அரசாங்கத்துடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ மையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதேநேரம் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளில்  நேற்று  காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்று  காரணமாக பல பிரதேசங்களில் மரங்கள் முறிந்துள்ளன.
அங்கு பல இடங்களில் மின்சார தடையும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இரத்தினபுரி, மாத்தறை, நுவரெலியா, காலி, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்படடுள்ள மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆய்வு பணிமனை இதனைத் தெரிவித்துளளது.

அத்துடன் கட்டுநாயக்கவில் நேற்று நிலவிய கடும் காற்றுடனான காலநிலை காரணமாக, 3 விமானங்கள் மத்தளை நோக்கி திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மலேசியா – கோலாலம்பூர் நகரில் இருந்து இரவு 10 மணிக்கு பயணித்த ஏயார் ஏசியா விமானம், சென்னை மற்றும் பங்களுர் நகரில் இருந்து பயணித்த இலங்கை விமான நிலையத்திற்கு உரித்தான இரு விமானங்களும் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் காலநிலை சீரடைந்த நிலையில், இன்ற காலை முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சேவைகள் வழமைப் போல இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment