புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு

277 0

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புகையிரத பாதைகளில் மண்சரிவு மற்றும் மரம் முறிவுகள் ஏற்பட்டு புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய களனிவெளி புகையிரத வீதி, அவிசாவளை தொடக்கம் கொட்டாவ வரையிலான புகையிரத வீதியில் பல இடங்களில் மரங்கள் உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை தொடக்கம் நானுஒயா வரையிலான புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தொட்டை ஆகிய மாவட்டங்கள் மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பல இடங்களில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும், வீதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதாகவும் தெரவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை வரையில் பல வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களும் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

சீரற்றக் காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a comment