ராஜினாமா செய்ய மாட்டேன் : சசிகலா புஷ்பா

417 0

1470280574-4381அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா சென்னை விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டி ஒன்றில் தான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவது இல்லை என மீண்டும் கூறியுள்ளார்.

சசிகலா புஷ்பாவின் வீட்டில் பணியாற்றிய இரண்டு பெண்கள், சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் தங்களைத் துன்புறுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர். இதில் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை அவர்கள் மூன்று பேரும் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

இதனையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த சசிகலா புஷ்பா எம்பி. சென்னையில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா என்னை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்கின்றார். நான் எக்காரணத்தை கொண்டும் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை, தொடர்ந்து எம்.பி.யாக நீடிப்பேன் என்று அதிரடியாக தெரிவித்தார்.