அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வில் குழப்பம் இல்லை: வைத்திலிங்கம் எம்.பி.

251 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்வதில் எந்தவித குழப்பமும் இல்லை என வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை வைத்திலிங்கம் எம்.பி. திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சையில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் விழாவில் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்வதில் எந்த வித குழப்பமும் இல்லை. ஜெயலலிதா ஆசியுடன் முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சரும் இணைந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

தினகரன் அணியில் இருந்து 3 எம்.பி.க்கள் எங்கள் அணிக்கு வந்துள்ளனர். அந்த அணியில் இருந்து விலகி வந்து இணையும் அனைவரையும் வரவேற்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment