கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஆய்வில்.20 பொது அமைப்புக்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் க.தவலிங்கம் தலமையில் இடம்பெற்ற கருத்துப் பதிவின்போதே குறித்த 20 அமைப்புக்களும் தமது கருத்தை பதிவு செய்து கொண்டனர்.
இதில் அதிக அமைப்புகள் தமது கருத்துப் பகிர்வின்போது கிளிநொச்சி மாவட்டத்தில் 4 மாகாண சபை உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இரண்டு தொகுதிகளே அமையப்பெறும் எனவே தொகுதிகளிற்கு தனித் தனியான பெயர்களை சூட்டுவதனால் ஏனைய பிரதேச மக்கள் தமது கிராமத்தின் பெயரோ அல்லது பிரதேச செயலக பிரிவின் பெயரில் தொகுதி அமைந்தால் ஏனைய இரு பிரதேச செயலகங்களின் பெயர்கள் இல்லாத நிலமை காணப்படும்.
இவற்றினை கருத்தில் கொண்டு பச்சிளைப்பள்ளி , கண்டாவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவினையும் கரைச்சி மேற்கின் ஒரு பகுதியினையும் உள்ளடக்கி கிளிநொச்சி குழக்குத் தொகுதியெனவும் கரைச்சி மேற்குப் பகுதியினையும் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவினை உள்ளடக்கிய வகையில் கிளிநொச்சி மேற்கு தொகுதியெனவும் இரு தொகுதிகளை உருவாக்க முடியும் என அதிக அமைப்புக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.