சிரியா அமைதிப் பேச்சு: ஜெனீவாவில் இன்று தொடக்கம்

400 0

சிரியா உள்நாட்டுப் போருக்கு தீர்வு காண்பது தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் இன்று தொடங்குகிறது.

சிரியா நாட்டில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைத் சேர்ந்த எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்து வருகின்றன.

இதனிடையே ஐ.எஸ். தீவிரவாத அமைப்பும் அந்த நாட்டின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை போரில் ஈடுபட்டதால் ஐ.எஸ். அமைப்பிடமிருந்து பெரும் பகுதியை அதிபர் ஆசாத் மீட்டுள்ளார்.

இந்தப் பின்னணியில் ஐ.நா. சபை ஏற்பாட்டின்பேரில் சிரியா உள்நாட்டுப் போருக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஜெனீவாவில் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இதில் அதிபர் ஆசாத் தரப்பு குழுவும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த குழுக்களும் பங்கேற்கின்றன. அதிபர் ஆசாத் பதவியை விட்டு விலகி பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி வருகிறது. ஆனால் இப்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடத்த முடியாது என்று ஆசாத் கூறி வருகிறார். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறியில் முடியக்கூடும் என்று கூறப்படுகிறது.

Leave a comment