பொது உடமை சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ம் திகதி வரை நிறுத்தி வைக்குமாறு மேமுறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
மேலும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளை குறித்த தினத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுவிடுக்கப்பட்டுள்ளது.
தான் கைது செய்யப்படக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக தெரிவித்து அதனை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனு இன்று நீதிபதிகளாக எல்.டி.டீ.தெஹிதெனிய, மற்றும் டிரான் குணரத்ன ஆகியோரினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.