செல்பி மோகத்தால் புகையிரத பாதை யில் செல்பி படம் எடுத்துக்கொண்டிருந்த வேளையில் ரயிலுடன் மோதி இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாத காலப்பகுதி வரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய பேரவையின் ஒருங்கிணைப்பாளர் புத்திக பிரதாப் தெரிவித்தார்.
வீதி பாதுகாப்பு தேசிய பேரவை இல் லாத காரணத்தால் கடந்த வருடம் இதையொத்த சம்பவங்கள் குறித்த தரவுகளை ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை எனவும் புத்திக பிரதாப் மேலும் தெரிவித்தார். இளைஞர் யுவதிகளிடம் செல்பி மோகம் அதிகரித்து காணப்படுவது கவலைக்குரியது என இவர் மேலும் தெரிவித்தார்.