சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் ஆரம்பம்

286 0

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று (29) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைத்தியபீடத்துக்கான பாடப்பிரிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த வருட பெறுபேறுகளின் அடிப்படையில் 75 மாணவர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உயர்கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment