பண்டாரகம, அடுலுகம, கல்ஹேன பிரதேச ஆற்றில் படகில் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த இரு இளைஞர்களும் நீரில் மூழ்கியதை அடுத்து பிரதேசவாசிகள் அவர்களை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த நபர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் வேளையில் உயிரிழந்துள்ளனர்.
பண்டாரகம, அடுலுகம, பகுதியை சேர்ந்த 17, 21 வயதுடைய இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பில் நீதவான் மற்றும் பிரேத பரிசோதனைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.