நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் 27-11-2017 திங்கக்கிழமை வெகுசிறப்பாக நினைவு கூரப்பட்டது. தமிழீழ விடிவிற்காய் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எம் மண்ணின் மைந்தர்களை நினைவுகூர இவ்வாண்டு வழமையை விட கூடுதலான மக்கள் கலந்து கொண்டார்கள்.
12.35 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி பொதுச்சுடரினை மாவீரர் குடும்பத்தினர் ஏற்றிவைத்தனர்.அதனைத் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பின் மாவீரர்நாள் அறிக்கை
வாசிக்கப்பட்டு சரியாக 01.35 இற்கு மணியொலி எழுப்பப் பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டபின்னர் ,01.37 மணிக்கு துயிலும் இல்லத்திற்கன பிரதனசுடரை மாவீரரின் தந்தை ஏற்றிவைத்தார்.
அதனைதொடர்ந்து எங்கள் காவிய நாயகர்களுக்கு மாவீரர் குடும்பத்தினர் ஈகைச்சுடரேற்ற தொடர்ந்து பொது மக்கள் அனைவரும் திரளாக வந்து அந்த சூரியப் புதல்வர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து தமிழமுதம் இசைக்குழுவினரின் எழுச்சி கானங்கள்,எழுச்சி நடனங்கள், கவிதைகள் ம்ற்றும் சிறப்புரை இடம்பெற்றன. தொடர்ந்து 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய நாள் விளையாடுபோட்டிகளில் வெற்றியீட்டிய கழகங்களுக்கு பரீசிகள் வழங்கப்பட்டது.
இறிதி நிகழ்வாக எங்கள் தேசியக்கொடி கையேந்தலைத்தொடர்ந்து நம்புங்கள்
தமிழீழம் நாளை பிற்க்கும் என்றபாடலுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுபெற்றன.