ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் யாழில் கைது

277 0

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாண நகரின் பேருந்து நிலையத்துக்கு அண்மையில் வைத்து இன்று (28) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இருவரிடமும் இருந்து 2 கிராம் எடையுடைய 60 ஹெரோயின் பக்கெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கந்தளாய் மற்றும் மாத்தளையைச் சேர்ந்த 37, 28 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment