ஆனால் அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் பிரபாகரனுக்கு உறுதியான ஆதரவு வழங்கியதாக ஆயுதக் குழு கூறியிருந்தது.
சென்னை வி.ஓ.சி. நூலகத்தினால் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட பல ஆவணங்கள் மற்றும் பிரகாகரனின் வரலாறு அடங்கிய புத்தகம் ஒன்று விரைவில் வௌியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக திரட்டப்பட்ட ஆவணங்களில் உள்ள பல தகவல்கள் தொடர்பில் தஹிந்து பத்திரிகை செய்தி வௌியிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களின் படி விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருந்த இணக்கம் மற்றும் பகைமை பற்றிய பல விடயங்கள் தொடர்பான தகவல்கள் வௌியாகியுள்ளன.
இந்தியா, குறிப்பாக இந்திய இராஜதந்திரியாக இருந்த ஜே.என். திக்சித், இந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதற்காக அமைப்பை தடை செய்ய முயற்சித்ததாக எல்.ரீ.ரீ.ஈ குற்றம் சுமத்தியுள்ளதுடன், எம்.ஜி.ஆர் பிரபாகரனுடன் பின்னால் இருந்து எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
“நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் நான் அதை ஆதரிப்பேன்” என அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் கூறியதாக விடுதலைப் புலிகள் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியுள்ளனர்.
உண்மையில், 1987 இல், உடன்படிக்கை கையெழுத்திட்ட ஆண்டில், எல்.ரீ.ரீ.ஈ “ஈழ விடுதலை இயக்கம் ஒரு கடினமான கட்டத்தை எட்டியிருந்ததாக விடுதலைப் புலிகள் அப்போது விவரித்துள்ளனர்.
“விடுதலை இயக்கம் மிகவும் நசுக்கப்பட்டிருந்தது. இது சனி (சனியன்) வருடமாக இருந்தது” என விடுதலைப் புலிகள் அப்போது கூறியுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கும் எந்தவொரு உடன்படிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரபாகரன் தெரிவித்திருந்ததாகவும் த ஹிந்து வௌியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.