தேர்தல் குறித்து அரசாங்கம் மௌனம் கலைக்காவிட்டால் நாடு பூராகவும் மக்களை ஒன்றுதிரட்டி கொழும்பை சுற்றிவளைப்போம்!

230 0

மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒட்டிக்கொண்டு தமது இருப்பை தக்கவைக்கும் முயற்சிகளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்றார். தேர்தலை பிற்போடுவதன் முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்றுகொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

இந்த வாரத்தினுள் தேர்தல் குறித்து அரசாங்கம் மௌனம் கலைக்காவிட்டால் நாடு பூராகவும் மக்களை ஒன்றுதிரட்டி கொழும்பை சுற்றிவளைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment