தபால் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை !

284 0

93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், தபால் மூலம் வாக்களிக்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை, குறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்களை ஒப்படைக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment