இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 556 பேர் கைது!

233 0

பொது மன்னிப்பு காலத்தில் இராணுவத்தில் சரணடையாத மற்றும் சட்ட ரீதியில் விலகிக்கொள்ளாத  இராணுவ உறுப்பினர்கள் 556 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இராணுவ ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விடுமுறை பெறாமல் சேவையில் இருந்து இடை விலகியிருந்த அவர்களுக்கு மீண்டும் இராணுவத்தில் இணைவதற்காக பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய கடந்த 22ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் 556 கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதியில் இருந்து அமுலில் இருந்த பொது மன்னிப்புக் காலத்தில் 11,232 பேர் இராணுவத்தில் இருந்து சட்டரீதியாக விலகிக்கொண்டுள்ளனர்.

இவர்களில் 15 அதிகாரிகளும் 9 கெடேட் அதிகாரிகளும் அடங்குகின்றனர். இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற மேலும் 26,000 பேரை கைது செய்ய இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment