16 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்டுப் பணம் செலுத்தியுள்ளது.
களுத்துறை, கம்பஹா, காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 16 உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பிலேயே இவர்கள் இவ்வாறு கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
93 உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நேற்று (27) காலை ஆரம்பிக்கப்பட்டதோடு, எதிர்வரும் 13ம் திகதி நண்பகல் வரை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 11ம் திகதி முதல் 14ம் திகதி நண்பகல் வரை இடம்பெறும் என, தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.