முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எந்தவொரு நிதி மோசடியுடனும் தொடர்புடையவர் அல்ல !-சரத் அமுணுகம

244 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எந்தவொரு நிதி மோசடியுடனும் தொடர்புடையவர் அல்ல என, அமைச்சர் சரத் அமுணுகம தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரைக் கைதுசெய்யத் தயாராகி வருவதாக, நாட்டில் அநாமத்தேய தகவல்கள் பரவிவருவதாக குறிப்பிட்ட அவர், அதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்ய எந்தவொரு காரணமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment