சிரியாவில் ரஷ்யா வான்வழித் தாக்குதல்: 21 குழந்தைகள் உட்பட 53 பேர் பலி

242 0

சிரியாவின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 53 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சிரியாவை உன்னிப்பாக கண்காணித்து வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறும்போது, , “சிரியாவின் மேற்குப் பகுதியில் ஐஎஸ் வசமுள்ள கடைசி பகுதியான அல்-ஷாஃபாஹ் கிராமத்தில் ரஷ்யப் படைகள் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்த வான்வழித் தாக்குதலில் குடியிருப்புப் பகுதிகள் சேதமடைந்தன. இந்தத் தாக்குதல்களில் 53 பொதுமக்கள் பலியாகினர். இதில் 21 குழந்தைகளும் அடக்கம்” என்று கூறப்பட்டுள்ளது.

சிரிய கண்காணிப்புக் குழுவின் இந்தத் தகவலை ரஷ்யா மறுத்துள்ளது. தீவிரவாதிகளின் இடத்திலேயே குண்டுகள் போடப்பட்டதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலக கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகளும் சிரியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் சிரியாவின் பல்வேறு நகரங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து வைத்துக் கொண்டனர். இந்நிலையில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக கடந்த 2015-ம் ஆண்டு முதல் ரஷ்யாவும் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ரஷ்ய – சிரிய அரசுக் கூட்டுப் படைகள் சிரியாவில் ஐஎஸ் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளன. இன்னும் மிதமுள்ள ஐஎஸ் பகுதிகளை கைப்பற்ற தொடர்ந்து தாக்குதல்களை நடந்தி வருகின்றன. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர். இதற்கு மனித உரிமை அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், இதனை மீறி ரஷ்யா தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Leave a comment