தமிழகம் கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வளைவில் மோதி, இளைஞர் உயிரிழந்த இடத்தில் “who killed ragu ? ” என்ற வாசகம் நிறப்பூச்சால் எழுதப்பட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, கோவை அவினாசி வீதியில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த வழியாக சென்ற ரகுபதி என்ற இளைஞரின் இருசக்கர வாகனம், அலங்கார வளைவின் மீது மோதி உயிரிழந்தார்.
இந்நிலையில், அவினாசி வீதியில் ரகுபதி உயிரிழந்த இடத்தில், “who killed ragu ? ” என நிறப்பூச்சால் எழுதப்பட்டுள்ளது.
மேலும், அலங்கார வளைவு அமைப்பதற்காக தோண்டப்பட்ட, குழியும் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.