யாழில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் மர்மம்

251 0

மானிப்பாய் சங்கம்வேலி பகுதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

3 வயதுடைய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீண்ட நேரமாக சிறுவனை காணாமல் தேடிக்கொண்டிருந்த பெற்றோர் கிணற்றை பரிசோதித்த போது சிறுவன் கிணற்றிற்குள் சடலமாக மிதப்பதனை கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில், காவல் துறையினருக்கு அறிவித்ததன் பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கிணற்றினை சுற்றி மூன்று அடிக்கு மதில் காணப்படுகின்ற நிலையில் சிறுவன் தவறி விழுவதற்கான சாத்தியகூறுகள் இல்லை என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சிறுவனின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a comment