கண்டி மாவில்மடை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் இருந்து ஒன்பது அடி உயரமுள்ள இரு கஞ்சா செடிகளை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இன்று பொலிஸ் அவசரப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி குறித்த இடத்தை சோதனையிட்ட பொலிஸார் அங்கு ஹோட்டல் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளதுடன் அவ் வளாகத்தில் ஒன்பது அடி உயரமுடைய இரு கஞ்சா இசடிகள் வளர்க்கப்பட்டிருந்ததையும் அவதானித்துள்ளனர்.
அவ் இரு கஞ்சா செடிகளையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருரையும் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கண்டி பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக கட்டுகாஸதோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.