கொஸ்கட பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்களும் அந்தப் பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்விபயிலும் மாணவர்கள் எனவும் தாக்குதலை மேற்கொண்ட மாணவனும் அதே வகுப்பில் கல்விபயில்பவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலிர் ஒரு மாணவனுக்கு வயிற்றிலும் மற்றைய மாணவனுக்கு கையிலும் காயமேற்பட்டுள்ளது.
காயமடைந்த மாணவர்கள் இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலை மேற்கொண்ட மாணவனுக்கும் காயமடைந்த மாணவனொருவனுக்குமிடையில் இருந்த பழைய பிணக்கு காரணமாக குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலைத் தடுக்க முற்பட்டவேளை சக மாணவன் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட மாணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.