யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் முன்பாக தமிழீழ மாவீரர்களுக்கும், தேச விடுதலைப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் இன்று காலை குறித்த இடத்திற்கு சென்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடுமையான பாதுகாப்புடன் இருக்கும் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக இந்த அஞ்சலி நிகழ்வு இன்று காலை 11.40 மணிக்கு நடைபெற்றுள்ளது.இதன்போது கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் நுழைவாயிலை மூடி நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸில் இருந்தும், நிகழ்வு நடைபெற்ற இடத்திலும் புலனாய்வாளர்கள் மக்களை புகைப்படம் எடுத்தனர்.
மேலும், இன்று காலை 11 மணியளவில் யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய பின்வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்திற்கும் அனந்தி சசிரதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் சென்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.