ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிளவுபடுவதனால் மகிழ்ச்சியடைய முடியாது. எதிரணியில் பலவீனமாக உள்ள நபர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாம் தனித்து ஆட்சியமைக்கும் வியூகங்களை வகுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குருநாகல் பிரதேசத்தல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.