உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடும்-நிமல் சிறிபால டி சில்வா

11260 71

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

காலி அபராதுவ நகரில் நிர்மாணிக்கப்பட்ட புதிய புகையிரத நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்துபோட்டியிடுவதனால் நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் எந்தவித சிக்கல்களும் ஏற்படமாட்டாது என்றும் அமைச்சர் சகுறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசியல் கலாசாரம் ஒன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க உள்ளூராட்சி மன்றங்களுக்கு மிகவும் பொருத்தமானவர்களை பொதுமக்கள் தேர்வுசெய்வர். மக்களின் ஜனநாயக உரிமைக்கு முன்னுரிமை அளித்து அதனை பாதுகாக்கும் வகையில் அமைதியான தேர்தல் ஒன்றை நடத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Leave a comment