ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டம் இன்று

322 0

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதைக்கான ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற அணியின் விசேட கூட்டமொன்று இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடம் பல்வேறு யோசனைகளை முன்வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, குறித்த யோசனைகள் சம்பந்தமாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment