வாகன விபத்தில் இருவர் பலி

288 0

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் சாவகச்சேரி பூனாவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் பஸ் வண்டி ஒன்றும் மோதியதால் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களின் கவனயீனமே குறித்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment