ஆவா கும்பலின் மேலும் இரு உறுப்பினர்கள் கைது

263 0

குற்றச்செயல் ஒன்றிற்காக வாள் ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆவா கும்பலின் இரு உறுப்பினர்கள் இன்று அதிகாலை சாவகச்சேரி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்யும் வேளையில் குறித்த நபர்கள் வைத்திருந்த வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 21, 22 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment