ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தென் கொரியா பயணம்!

299 0

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தென் கொரியா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.

தென்கொரிய ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி 30 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார்.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் ஏற்பட்டு 40 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இவ்விஜயம் அமைகின்றது.

எதிர்வரும் 29ம் திகதி தென் கொரிய ஜனாதிபதியுடன் சந்திக்கும் நம்நாட்டு ஜனாதிபதி இலங்கை மற்றும் தென் கொரியாவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளார். தென்கொரியாவில் இருக்கும் இலங்கையர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment