அகலவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓமன்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்றினைத் திருடிய இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை(26) 4 மணியளவில் இவர்களை கைது செய்ததுடன், இவர்களால் திருடப்பட்ட 6,50,000 ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் 43 மற்றும் 70 வயதானவர்கள் என்றும்,இவர்கள் இன்றைய தினம்(27) மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.