தெரணியகல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 05.30 அளவில் தெரணியகல – மாலிபொட பகுதியில், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான, தோட்டத்தில் பதுங்கியிருந்த நிலையில், அவர் கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் மாலிபொட பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவராகும். கடந்த 25ம் திகதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
மேலும், அப் பெண்ணின் மகள்களான இரு சிறுமியரும் இதன்போது காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.