ஆஸ்கார் பிஸ்டோரியஸின் சிறை தண்டனை இரட்டிப்பானது!

227 0

தனது காதலியை கொன்ற ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸின் சிறைதண்டனை 13 ஆண்டு ஐந்து மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரீவாவின் கொலைக்கு ஆறு ஆண்டு கால சிறைதண்டனை என்பது “அதிர்ச்சியூட்டும் அளவிலான குறைவான தண்டனை” என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

வீட்டில் இருந்து தொலைகாட்சியின் மூலம் செய்தியை தெரிந்துக்கொண்ட ஸ்டீன்கேம்பின் பெற்றோர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக செய்தித்தொடர்பாளர் தனியா கொயேன் தெரிவித்தார்.

ரீவாவுக்கு நீதி கிடைத்திருப்பதாக கருதும் அவர்கள், இனிமேல் அவரது ஆத்மா சாந்தியடையும் என்று அசோசியேட் பிரஸ்ஸிடம் தனியா கொயேன் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று திருடன் மறைந்திருப்பதாக நினைத்து தவறுதலாக ரீவாவை சுட்டு விட்டதாக ஆஸ்கர் தெரிவித்தார்.

தற்போது தென் ஆஃப்ரிக்காவில் கொலைக்கு தண்டனையாக பரிந்துரைக்கப்பட்டுள்ள குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது. ஏற்கனவே சிறையில் கழித்த காலம், தண்டனைக்காலத்தில் இருந்து குறைத்துக்கொள்ளப்படும்.

முதலில் வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், மறுவாழ்வு மற்றும் குற்றத்தை உணர்ந்து ஒப்புகொண்டது ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஆறு ஆண்டு கால தண்டனை வழங்கியிருந்தது. எச்சரிக்கை விடுக்கும் வகையில் துப்பாக்கியால் சுடாதது போன்ற முக்கியமான காரணிகளை கவனத்தில் கொள்ளவில்லை.

பிஸ்டோரியஸின் சகோதரர் கார்ல் இந்த முடிவால் “அவர் நிலைகுலைந்து நொறுங்கிவிட்டார், மனமுடைந்துவிட்டார்” என்று சமூக ஊடகங்களில் கூறியிருக்கிறார்.

“நாங்கள் அனைவருமே ஈடுசெய்ய முடியாத இழப்பை அனுபவித்திருக்கிறோம். ரீவா இறந்துபோனது எங்கள் குடும்பத்திற்கும் பெரிய இழப்பு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு வழங்கப்படும்போது ஆஸ்கர் பிஸ்டோரியஸ் நீதிமன்றத்தில் இல்லை.

2014ஆம் ஆண்டில் பிஸ்டோரியஸ் தாக்கியதால் ரீவா இறந்ததாக கூறப்பட்டு ஐந்து ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அவர் கொலை செய்தார் என்று கண்டறியப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில் ஆறு முறை தங்கப் பதக்கம் வென்ற முதல் தடகள வீரர் பிஸ்டோரியஸ். ‘பிளேட் ரன்னர்’ என்று வர்ணிக்கப்படும் ஆஸ்கர் பிஸ்டோரியஸ், செயற்கைக் கால்களுடன் 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார்.

பிஸ்டோரியஸ் சிறு குழந்தையாக இருந்தபோதே முழங்காலுக்கு கீழே அவரது கால்கள் துண்டிக்கப்பட்டன.

பிஸ்டோரியஸின் எழுச்சியும், வீழ்ச்சியும்

  • ஆகஸ்ட் 2012: லண்டன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தங்க பதக்கம் வென்றார்
  • பிப்ரவரி 2013: தனது தோழி ரீவா ஸ்டேன்கேம்பை சுட்டுக்கொன்றார்
  • மார்ச் 2014: விசாரணை தொடங்கியது
  • செப்டம்பர் 2014: பிஸ்டோரியஸ் கொடூர கொலை குற்றத்தை செய்தார் என்று நீதிபதி கூறினார்.
  • அக்டோபர் 2014: ஐந்தாண்டு சிறைதண்டனை தொடங்கியது.
  • அக்டோபர் 2015: வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்
  • டிசம்பர் 2015: மேல்முறையீட்டு கொலைக்கான தீர்ப்பை மாற்றுயமைத்தது.
  • ஜூலை 2016: கொலைக்கான தண்டனை ஆறு ஆண்டு சிறைதண்டனையாக மாற்றப்பட்டது.
  • நவம்பர் 2017: அனுபவித்த தண்டனைக் காலத்துடன் சேர்த்து மொத்தம் 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

Leave a comment