தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக மீண்டும் பழனி திகாம்பரம் தெரிவு!

322 0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் 15 ஆவது பேராளர் மாநாடு இன்று (26) ஹட்டன் DKW கலாச்சார மண்டபத்தில் நடைப்பெற்றது. 

இதன்போது, சங்கத்தின் தலைவராக அமைச்சர் பழனி திகாம்பரம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

பொதுச் செயலாளராக எஸ். பிலிப், பிரதி பொதுச் செயலாளராக எம். திலகராஜா, நிதி செயலாளராக ஜே.எம்.செபஸ்டியன், உதவி நிதி செயலாளராக சோ.ஸ்ரீதரன், பிரதி தலைவராக உதயகுமார் ஆகியோர் தெரிவாகினர்.

சிரேஸ்ட ஆலோசராக சிங்.பொன்னையா, மகளிர் அணித் தலைவி சரஸ்வதி சிவகுரு, தேசிய அமைப்பாளராக நகுலேஸ்வரன், இளைஞர் அணித் தலைவர் பா.சிவனேசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதுதவிர, சிரேஷ்ட உபதலைவர்களாக வி.கே.இரட்ணசாமி, ஓ.ஏ.மாணிக்கம் , உபதலைவர்களாக வி.சிவானந்தன், ஏ.இராஜமாணிக்கம், எஸ்.இராஜமாணிக்கம், உதவிச் செயலாளர்களாக வீரப்பன், வைலட்மேரி, பி.கல்யாணகுமார், ரட்ணம் சிவகுமார, பிரதேச தேசிய அமைப்பாளர்களாக விஜயவீரன் (கொட்டகலை), கல்யாணகுமார் (தலவாக்கலை), ஏ.பிரசாத் (பூண்டுலோயா) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

Leave a comment