சிறி லங்கா சுதந்திர கட்சியுடன் நடத்தப்படும் கலந்துரையாடல்களின் போது பதவிகள் குறித்து கவனம் செலுத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவியை ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படும் கருத்து முற்றிலும் பொய்யானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.