இந்தோனேசியா: பாலி தீவில் 50 ஆண்டுக்கு பிறகு வெடித்த எரிமலை

345 0

இந்தோனேசியாவின் பாலி தீவில் 50 ஆண்டுக்கு பிறகு வெடித்த ஆகங் எரிமலையால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசியா தீவுக் கூட்டங்கள் அடங்கிய நாடு. இங்கு பல தீவுகளில் எரிமலைகள் உள்ளன. பாலித் தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது.
இந்த எரிமலை கடந்த 22-ம் தேதி வெடிக்க தொடங்கியது. அதில் இருந்து புகை வெளியேறி 2300 அடி உயரத்துக்கு எழுந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த எரிமலை வெடித்து சிதறும் நிலை உள்ளது.
எனவே அதன் அருகே தங்கியிருக்கும் கிராம மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பம் மற்றும் கால் நடைகளுடன் வெளியேறி விட்டனர்.
பாலித்தீவு அழகிய பகுதிகளை உள்ளடக்கியது. விடுமுறை தீவு என அழைக்கப்படும். இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். தற்போது இங்கு எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்துவிட்டது.
இந்நிலையில், இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக எரிமலையில் இருந்து தொடர்ந்து அதிக அளவில் புகை வெளியேறி வருகிறது. இதன் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இங்கு 1963-ம் ஆண்டு அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடித்தது. அப்போது 1600 பேர் உயரிழந்தனர். அதன் பின்னர் தற்போது தான் இந்த எரிமலை வெடித்துள்ளது.

Leave a comment