சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தில் நேற்று(26) நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடி விபத்தில் இருவர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்துக்குட்பட்ட நிங்போ என்ற துறைமுக நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் சாலையோரம் உள்ள ஒரு கட்டிடத்தை இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 9 மணியளவில் இந்த கட்டிடத்தில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தை இடிப்பதற்காக அங்கு சேமித்து வைத்திருந்த வெடிப் பொருட்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட இந்த விபத்தில் அருகாமையில் உள்ள வீடுகளும் வணிக நிறுவனங்களும் கடுமயாக சேதமடைந்தன.
பல வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. சம்பவ இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர தூரத்திலிருந்த கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.
இந்த விபத்தில் இருவர் பலியானதாகவும் சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.