2012ஆம் ஆண்டு வெலிக்கடைச் சம்பவம் ஐநாவில் முறையிட முடிவு

5699 0

Welikada-prison-riot-un-colomboகொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதிகள் தொடர்பான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்காததால் கொழும்பிலுள்ள ஐநா தூதரகத்தில் இன்று முறையிடப்போவதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் உருவானது. இம்மோதலில் 27 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியில் இருந்தபோது வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக மைத்திரி அராசாங்கம் குழுவொன்றை நியமித்துள்ளது.

விசாரணை தொடர்பான அறிக்கை சிறீலங்கா அதிபர், பிரதமர் மற்று காவல்துறை மா அதிபர் ஆகியோரிடம் கையளித்தும் அவர்கள் இதுவரை சம்பந்தப்பட்டோருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், தாம் கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தில் முறையிடப்போவதாக அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.

Leave a comment